Pages

Sunday, April 6, 2014

ராகுவும் குடும்ப வாழ்க்கையும்

             

                                                                       


                         ஜாதகத்தில் ராகு அல்லது கேது பகவான் லக்னத்திற்கு இரண்டாமிடத்திலோ அல்லது எழாமிடத்திலோ இருந்தால் அது சர்ப்ப தோஷம் பெற்ற ஜாதகம் எனப்படுகிறது. இவ்வாறு ராகு கேது உள்ள ஜாதகங்களுக்கு இன்னொரு நாக தோஷம் உள்ள ஜாதகத்தை மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது எப்படி செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை சேர்க்க வேண்டும் என்று சொல்கின்றோமோ அதே போல இந்த சர்ப்ப தோஷத்திற்கும் சொல்வது என்பது வித்தியாசமான நிபந்தனை ஆகும். இதற்கும் ஒரு படி மேலே போய்  ஒரு சில ஜோதிடர்கள் நீங்கள் பார்க்கும் வரனுக்கு இரண்டாமிடத்தில் ராகு அல்லது எட்டமிடத்தில் ராகு இருக்க வேண்டும் அதே போல சனி ஐந்தாமிடத்தில் இருக்குமாறு ஜாதகம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதோடு மட்டுமல்லாமல் ஜாதகம் பார்க்க செல்பவர்கள் கைகளிலேயே குறித்தும் கொடுத்து அனுப்புகிறார்கள். 

         வரன் தேடும் பெற்றோர்களும் இந்த குறிப்புகளை கைகளில் வைத்துக்கொண்டு திருமண தகவல் மையங்களில் கடலில் ஊசியை தொலைத்து விட்டு தேடுவதுபோல தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.ஒவ்வொரு பெற்றோரும் இந்த வரன் அமைந்து திருமணம் கை கூடுமா அல்லது அந்த வரன் அமைந்து திருமணம் கூடுமா ? என்ற மிகுந்த எதிர்பார்ப்போடு பரிதவிப்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய நிகழ்வாகும். மிகுந்த சிரமத்திற்கு பின்னர் ஒரு வழியாக எழில் ராகு அல்லது எட்டில் கேது இரண்டில் சனி என்பது போன்ற ஜாதகத்தை கண்டுபிடித்தபின் அந்த வரனின் படிப்பு வசதி , வேலை , தொலைவு , சமூக அந்தஸ்த்து , இதுபோன்ற காரணங்களால் பொருந்தாமல் போய்  விடுவதும் உண்டு. எனவே இது போன்ற சமுதாய காரணிகளை முன்னிறுத்தி தனது தேடுதலில் கிடைத்த ஜாதகங்களை ஜோதிடரிடம் கொண்டு சென்றால் அவர் ஒரே வரியில் இந்த ஜாதகம் எட்டில் கேது இல்லை எனவே பொருந்தாது என்பது போன்ற பதில்களை ஜோதிடர்கள் சொல்லும்போது ஏற்படும் மன வருத்தமானது சொல்லில் அடங்காது. ஒரு முறை திருமண தகவல் மையத்தில் ஜாதகம் தேர்ந்து எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் கூறிய  வார்த்தை இன்னும் காதில் ஒலித்துக்கொண்டு  உள்ளது.      " இந்த இடத்தில் ராகு இருக்கவேண்டும் அந்த இடத்தில் கேது இருக்க வேண்டும் என்பது போன்ற ஜோதிடர்களின் தகவலுடன் இங்கு வரனின் கோப்பை தேடும் பொது எதோ ஆங்கிலப் படத்தை புரியாமல் பார்ப்பது போன்று  உள்ளது  " என்ற அவரது வார்த்தை மிக மன வேதனை அடைந்து இருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. 

                ஒரு வழியாக இந்த சோதனைகள் எல்லாம் முடிந்தபோது குறிப்பாக பெண் வீட்டாராக இருந்து விட்டால் இன்னும் சோதனை முடியவில்லை என்பது போன்று ஆகிவிடுகிறது. 

                                                                           

                       மேலே கொடுக்கப்பட்டுள்ள  உதாரண ஜாதகம் ஒரு மாப்பிள்ளை ஜாதகமாகும்  இதில் நடப்பு தசை ராகு தசை குரு புத்தி. இந்த ஜாதகத்தில் எட்டில் குரு செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. அயன சயன போகாதிபதியான குருவினுடைய புத்தியில் நிச்சயமாக திருமணம் நடந்துவிடும். அனால் இந்த குரு புத்தி சுமார் ஒரு வருடத்தில்  முடிந்துவிடும்.பின்னர், நடக்க போகும் சனிபுத்தியானது ஏழாமிடத்தில் வக்கிர கதியில் உள்ளது, பொதுவாக மூன்றாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ தனிமையில் இருந்து திசை நடத்தும்போது அவர்களுக்கு அமைதியான அல்லது நிம்மதியான குடும்ப வாழ்க்கை கிடைப்பது இல்லை. எனவே இந்த உதாரண ஜாதகத்தில் குரு புத்தி முடிந்தவுடன் துவங்கும் சனி புத்தியானது நிச்சயமாக குடும்ப வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்கப் போகிறார். மேலும் ராகு சட்ட ரீதியான கிரகம் என்பதால் இவருடைய வாழ்க்கையில் குடும்ப பிரச்சனைகளுக்காக நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏறவேண்டிய சூழ்நிலையை உருவாக வாய்ப்பு  உண்டு. 

                 ஆனால் நடப்பது என்ன ? இந்த மணமகனின் பெற்றோர்கள் தங்கள் வரனுக்கு ஐம்பது சரவன் நகை மற்றும் சீர்வரிசைகள் என்று தங்களது எதிர்பார்ப்பை கூறியுள்ளனர். இவ்வளவு நகை சீர் வரிசைகளுடன் வரும் ஒரு பெண் எவ்வாறு இந்த மாமியார் அல்லது மாமனாருக்கு அடிப்படை தேவைகள் மற்றும் சேவைகளை செய்வார். இந்த அளவு சீர் வரிசை செய்ய தகுதியுடைய பெற்றோர்கள் தங்களது மகளை எந்த அளவுக்கு படிக்க வைத்து இருப்பார், எந்த அளவுக்கு செல்லமாக வளர்த்து இருப்பார். எந்த வேலையும் செய்ய விடாமல் தனது மகளை படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வைத்து இருப்பார். அடுத்த வீட்டுக்கு செல்லும் பெண்தானே அவள் இங்கு இருக்கும்வரை சந்தோஷமாக இருக்கட்டும் என்று தந்து மனைவியையும் வேலை சொல்ல விடாமல் வைத்து வளர்த்திருப்பார். 

                          இவ்வளவு கேப்பிடேசன் பீஸ் கொடுத்து வந்துவிட்டு வேலையும் பார்த்து சம்பளத்தையும் கொடுத்துவிட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பர். இங்கு தான் பிரச்னை விஸ்வருபம் எடுக்கிறது. எனவே பிரிவு என்பது தவிர்க்க முடியாததாகிறது. இருப்பினும் இந்த மாதிரி ஜாதகங்களை தெரிந்து எடுத்து விலக்குவது முக்கியமானதாகும். பத்து ரூபாயிக்கு கத்திரிக்காய் வாங்குவதையே அமுக்கி பார்த்து நசுக்கிப்பார்த்து வாங்கும் நாம் மாப்பிள்ளை தேர்ந்து எடுப்பதில் எந்த அளவு கவனமாக இருக்கவேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

                                                                      

Wednesday, March 26, 2014

சோதனை குழாய் குழந்தை பாக்கியம் கிடைக்குமா ? Test Tube Baby

                                                                                                                        " குழல் இனிது யாழ் இனிது என்பர் தத்தம்
                                           மழலைச்சொல் கேளா தவர் "

                                                                                                           திருவள்ளுவர்


                      திருமணம் ஆகும் வரை எப்போது திருமணம் என்று கேட்பவர்களுக்கு பதிலே சொல்ல முடியவில்லை என்பர். இதனாலேயே மற்ற உறவினர்களின் விஷேசத்திற்கு செல்லாமல் தவிர்ப்பவர்கள் அநேகம் பேர். ஆயினும் திருமணம் முடிந்த கையேடு ஏதாவது விசேஷம் உண்டா? என்பதே பெரும்பாலும் அடுத்த கேள்வியாக இருக்கும். குழந்தை பாக்கியம் தள்ளி போவதால் அந்த தம்பதியர் கவலைப்படுகிறார்களோ இல்லையோ அடுத்தவர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டே கவலைப்பட வைத்துவிடுகிறார்கள் என்றால் அது மிகையல்ல .இந்த குழந்தை பாக்கியம் பற்றிய கேள்வியுடன் வந்த தம்பதியின் ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 " கற்றலின் கேட்டல் நன்று  "  என்பது முதுமொழி எனவே இந்த ஜாதகங்களுக்கான விளக்கவுரையை ஒளிக்காட்சியாக Video formate இணைத்துள்ளேன்.
Friday, February 28, 2014

இரண்டு மனைவிகள் அமையும் யோகம் யாருக்கு உள்ளது ?

                                                                                 

                                            சாதரணமாக இரண்டு மனைவி யோகம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இந்த யோகத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இதற்க்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


             பொதுவாகவே இரண்டாமிடம் அல்லது ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் இருப்பது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல என்பது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.  இரண்டு மனைவி என்பதை எளிதாக காண இரண்டாமிடத்தில் ராகு பகவான் தனிமையில் இருந்து திசை நடத்தினால் அவருக்கு உறுதியாக இரு தாரம் அமைய வாய்ப்பு நூறு சதவிகிதம் உள்ளது. அதேபோல ராகு பகவான் மூன்றாமிடத்தில் தனிமையில் இருந்து திசை நடத்தினால் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை பெரும் போராட்டமாகவோ அல்லது உத்தியோகத்தின் நிமித்தம் கணவன் மனைவி இருவரும் தனி தனியே பிரிந்து வாழ்வதை அறுதியிட்டுக் கூறலாம்.

                    பின்வரும் இந்த உதாரண ஜாதகத்தைப் பார்க்கவும். இந்த ஜாதகத்தில் இரண்டாமிடமான கடகத்தில் இரண்டு பாவ கிரகங்கள் அமைந்துள்ளது, கேது பகவான் மற்றும் செவ்வாய் உள்ளது இந்த ஜாதகர் தனது முதல் மனைவி மூன்று குழந்தைகளுடன் இருக்கும்போதே இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையுடன் உள்ள  கைம் பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். இதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும். இரண்டாமிடத்ததிபதி ரூன ரோக சத்ரு ஸ்தானமான ஆறமிடத்து  அதிபதியான செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. இதனால் தனது முதல் மனைவியே இவருக்கு சத்ருவாகி காவல் துறை நீதிமன்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு காரண கர்த்தாவாகி விட்டார். ஆனாலும் பரிவர்த்தனை யோகத்தில் சந்திரன் ஆட்சியாவதால் திருமணமும் நடந்து மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகவும் ஆகிவிட்டார். இதற்க்கு புத்திர காரகன் குரு ஆட்சியாகி இருப்பதும் புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சியாகி இருப்பதும் சாதகமான சூழ்நிலையாகும். ஆயினும் இரண்டாமிடத்தில் உள்ள கேதுவும் இரண்டாம் அதிபதி சந்திரன் ஆறாமிடத்தில் இருப்பதும் இவருக்கு மனைவியே எதிரியாகவும் மாறுவதற்கு எதுவாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் இவருக்கு மிதுனம் உபய லக்னமாகும். உபய லக்னத்திற்கு  எழாமதிபதி பாதகதிபதியாகும்.இந்த எழாமிடத்து அதிபதி குரு பகவான் ஆட்சி பெற்று நிர்ப்பது மிக பாதகமான அமைப்பாகும். ஆக்சன் தான் நன்றாக இருக்குமே தவிர ஓவர் ஆக்சன்  நன்றாக இருக்காது. இங்கு குரு பகவான் ஆட்சி பெறுவது பாதகமான பலன்களையே செய்வார். அதிலும் குறிப்பாக ஏழாமிடமான மனைவி வழியாகவே அனைத்து சோதனைகளையும் கொடுப்பார் என்பதே விதியாகும். இதன் காரணமாகவே நீதிமன்றத்தின் நெடிய படிகளில் இந்த குடும்பத்தை ஏற வைத்து விட்டது. பதினொன்றாமிடத்து அதிபதியான செவ்வாய் பரிவர்த்தனையில் ஆச்சியாவது மறு திருமணத்தை குறிக்கிறது. இந்த செவ்வாய் கேதுவுடன் இணைவது கைம் பெண்ணை மறுமணம் செய்வதை குறிக்கிறது.  அதுவும் ஒரு காதல் திருமணமாகவே அமைந்தது, இந்த திருமணத்தில் இந்த ஜாதகருக்கு கிடைத்த மன நிம்மதி என்பது அளவுகடந்தது. அந்த அளவுக்கு இரண்டாமிட கேது செவ்வாய் மற்றும் ஏழாமிட தனித்த குரு இந்த ஜாதகரை மிக வலுவாக சிரமப்படுத்திவிட்டார் என்றால் அது மிகையல்ல. உபய லக்னத்திற்கு  ஏழாமிடத்தில் பாதகாதிபதி வலு பெறுவது என்பது இருதார யோகத்தையே குறிக்கிறது. இதேபோல மீனம் மற்றும் தனுசு லக்னத்திற்கும் இவை இரண்டும் உபய லக்னமாகும், புதன் ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது இருதார யோகத்தையே குறிக்கிறது.
ஓம் நமோ நாராயணாய நமஹ !!

Saturday, February 1, 2014

சகோதரன் இல்லாமல் இருப்பது எதனால் ?                          சிலருக்கு சகோதரன் இல்லாமல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பதன் காரணம் என்ன ? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். ஜாதக கட்டத்தில் சகோதர காரகன் என்பது செவ்வாயைக் குறிக்கும், அதே போல சகோதர ஸ்தானம் என்பது மூத்தோருக்கு பதினொன்றாம் இடமும் இளைய சகோதரத்திற்கு மூன்றாம் இடத்தையும் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்ததால் சகோதரன் இருப்பது இல்லை. இதில் மூன்றாமிடத்தில் செவ்வாய் இருந்தால் இளைய சகோதரன் வாய்ப்பது  இல்லை.அதேபோல பதினொன்றாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் மூத்த சகோதரன் இருப்பது இல்லை. அதையும் மீறி சகோதரன் இருந்தால் அவர்களும் சிரமப்பட்டு இருப்பவர்களையும் சிரமத்தில் கொண்டு விட்டுவிடுகிறார்கள்

                          பிருகு சூத்திரத்தில் சொன்னபடி " காரக கிரகம் காரக ஸ்தானத்தில் நிற்பது தவறு " என்ற விதியோடு ஒத்து போகிறது. இதையே ஜாதக அலங்காரத்தில்

                 "  சோதர காரகன் சோதர நாயகன் ற்றுட்ட
                          வட்டமங்கள் கூடி நிற்க சோதரம் சொப்பனம் கிட்டாதே.  "


                        என்று கூறுகிறது, சகோதர ஸ்தானதிபதியும் ( மூன்றாமிடத்ததிபதி அல்லது பதினொன்றாம் வீட்டதிபதியும் )  சகோதர காரகனான செவ்வாயும் ஆறு எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நின்றால் அந்த ஜாதகர்களுக்கு சகோதரன் என்பது கனவிலும் கிட்டாது என்று உறுதியாக கூறுகிறது.

                                         பின்வரும் உதாரண ஜாதகத்தில் ஒரு மூத்த சகோதரன் இருந்து தனது பதிமூன்றாம் அகவையில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.  இந்த ஜாதகத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் மூத்த சகோதர ஸ்தான அதிபதியான சந்திரனுடன் சகோதர காரகன் செவ்வாய் சேர்ந்து விரைய ஸ்தானம் என்னும் பன்னிரெண்டாமிடமான சிம்மத்தில் மறைந்து உள்ளது. இதனால் ஏற்ப்பட்ட சகோதர தோஷமே தனது அண்ணனை இழக்க நேரிட்டது.


             

                         

                          

Tuesday, November 19, 2013

ஏழாமிடத்தில் சனி இருந்தால் என்ன செய்யும் ?

உங்கள் ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சனி உள்ளதா ? அல்லது சனி எழில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகுமா ? 


Monday, November 18, 2013

நாட்டை ஆளும் ராஜ யோகம் பெற்ற சாதகமா உங்களுடையது ?                          ராஜ யோகம் என்பது பல ஜோதிட கிரந்தங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ராஜ யோகம் பெற்ற எல்லாரும் நாட்டை ஆள்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில், அப்படியானால் நாடாளும் ராஜ யோகம் என்பது எப்படி இருக்கும் ? இதற்க்கான பதில் தான் இந்த ஒளிக்காட்சி .                                             Thursday, November 7, 2013

சித்திரை மாதம் பிறந்தவரா நீங்கள் ?
            சித்திரை மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும். இது ஒருவருடைய ஜாதகத்தில் யோகமான அமைப்பாகும். ஒளி கிரகமான சூரியன் மற்றும் சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற ஒரு ஜாதகர் நிச்சயமாக பலபேருக்கும் தெரிந்த புகழ் பெற்றவராக இருப்பார்.

            வெகுசாதாரண நிலையில் ஒரு ஜாதகருடைய பிறப்பு இருப்பினும் அவர் உச்சம் அல்லது ஆட்சி பெற்ற சூரியன் வாய்க்கப் பெற்றால் அவருடைய வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைவார் என்பது திண்ணம்.